சினிமா

ஆரவ் மற்றும் குக் வித் கோமாளி அஸ்வின் இருவரும் ஏற்கனவே ஒன்றாக நடித்துள்ளார்களா! அதுவும் எந்த படத்தில் தெரியுமா?

Summary:

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி போட்டியாளர்கள், தொகுப்பாளர்கள் மற்றும் சீரியல் நடிகர், நடிகைக

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி போட்டியாளர்கள், தொகுப்பாளர்கள் மற்றும் சீரியல் நடிகர், நடிகைகள் பலரும் தற்போது சினிமாத்துறையில் களமிறங்கி முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அறிமுகமில்லாத பலரும் தற்போது பிரபலமாகிவிட்டனர்.

இவ்வாறு விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றியாளரானவர் ஆரவ். அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வரத் துவங்கிய நிலையில் ஆரவ் மார்க்கெட் ராஜா, ராஜபீமா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே ஆரவ் சைத்தான் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் அப்பொழுது அவர் பிரபலமாகவில்லை.

அவரைப்போலவே தற்போது விஜய் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஏராளமான ரசிகர்களை கொண்டிருப்பவர் அஸ்வின். இவர் விஜய் டிவியில் ரெட்டைவால் குருவி என்ற தொடரில் நடித்துள்ளார். மேலும் இவர் பல குறும்படங்களிலும் நடித்துள்ளார்.

 ஆரவ் மற்றும் அஸ்வின் இருவரும் ஒன்றாக மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஓகே கண்மணி படத்தில் நடித்துள்ளனர். இது குறித்து பலரும் அறியாத நிலையில் தற்போது  புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 


Advertisement