கார் டிரைவருக்கு 50 லட்சத்தில் புதிய வீடு! அசத்திய அந்த வள்ளல் நடிகை யார் தெரியுமா?

aaliyapath present new home to driver and helper


aaliyapath-present-new-home-to-driver-and-helper

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆலியா பட். இவர் தற்போது எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்ஆர் ஆர் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். 

இவர் சமீபத்தில் தனது 26ஆவது பிறந்தநாளை மிகவும் கோலாகலமாக கொண்டாடினார்.இந்த விழாவில் பல திரையுலக  பிரபலங்கள் கலந்து கொண்டு பெருமளவில் சிறப்பித்தனர்.

aalya pat 

இந்நிலையில் ஆலியா பட் தனது பிறந்தநாள் அன்று தன்னுடைய கார் ஓட்டுனர் சுனில் என்பவருக்கும், தனது உதவியாளராக இருக்கும் அன்மோல் என்பவருக்கும் மாபெரும் பரிசு வழங்கியுள்ளார்.

 அதாவது அவர் தனது ஓட்டுநருக்கும், உதவியாளருக்கும் அவர்கள் சொந்த வீடு வாங்கிக் கொள்வதற்காக 50 லட்சம் தொகையை காசோலையாக வழங்கியுள்ளார்.

aalya pat

 அவர்கள் பல வருடங்களாக ஆலியா பட்டிற்கு மிகவும் விஸ்வாசமாக இருந்துவந்துள்ளனர். அதனால் அவர்களுக்கு பெரியளவில் உதவி செய்ய வேண்டுமென ஆசைப்பட்ட ஆலியா பட் அதனை தனது பிறந்தநாளில் செய்துள்ளார்.

இதனால் ஆலியா பட்டிற்கு ரசிகர்கள் பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர்.