அச்சோ.. முகமெல்லாம் காயம்.. விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பிரபல நடிகை..! இவங்களுக்கா இப்படி?.. கலங்கும் ரசிகர்கள்..!!

அச்சோ.. முகமெல்லாம் காயம்.. விபத்தில் சிக்கி படுகாயமடைந்த பிரபல நடிகை..! இவங்களுக்கா இப்படி?.. கலங்கும் ரசிகர்கள்..!!



A celebrity involved in an accident

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் திவ்யா கோஸ்லா. இவர் படப்பிடிப்பின் போது விபத்திற்குள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். யாரியான் 2 திரைப்படத்தை இவரே இயக்கி நடித்து வரும் நிலையில், அந்த படத்தின் படப்பிடிப்பின்போது விபத்து நடந்தது.

படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டபோது படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "படப்பிடிப்பு தளத்தில் ஆக்சன் காட்சியில் நான் அடித்தபோது படுகாயமடைந்தேன். 

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். உங்களது ஆசி எனக்கு தேவை" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது முகம் விபத்தில் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 

இது குறித்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் பெரும் சோகத்தில் கலங்கியுள்ளனர். அத்துடன் விரைவில் உங்களுக்கு குணமாக கடவுளை வேண்டிக்கொள்கிறோம் என்று கமென்ட் செய்து வருகின்றனர்.