ரசிகர்கள் மகிழ்ச்சி...! 96 படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
சமீப கால தமிழ் திரையுலகில் நடிப்பில் தனக்கென தனி பாதையை உருவாக்கிக்கொண்டு பயணிப்பவர் தான் நம்ம விஜய் சேதுபதி அவர்கள். அவர் தற்போது பிரபல நடிகை திரிஷா உடன் சேர்ந்து நடித்துள்ள படம் தான் "96". இந்த படத்தின் ட்ரைலர் சில நாட்கள் முன்னதாக வெளியிடப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது...
"96" படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் ரிலீஸ் செய்ய தயாராக இருக்கிறது. இந்த படத்தை மெட்றாஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட இருக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் சி.பிரேம்குமார் ஆவார்...
இந்த படம் முழுக்க முழுக்க காதல் படமாக இருக்கலாம் என மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தின் ட்ரைலரில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா அவர்களின் பள்ளி பாரு காதலை மையமாக கொண்டதாக காட்டப்பட்டிருக்கிறது...
இந்த படம் ரிலீஸ் தேதியை எதிர் பார்த்து கொண்டு காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வகையில், இந்த படம் வருகிற அக்டோபர் 4ம் தேதி வெளியிட இருப்பதாக அந்த படத்தின் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளனர்...