#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
96 திரைப்படத்திற்கு தெலுங்கில் என்ன பெயர் வைத்துள்ளார்கள் தெரியுமா? இதுவா?

விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் 96. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் ஒரு காதல் காவியமாக அனைவராலும் கொண்டாடப்பட்டது. பள்ளி பருவ காதலை மையமாக கொண்ட இந்த திரைப்படம் அதிக ரசிகர்களை கவர்ந்து வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்தது.
படம் தமிழில் வெற்றிபெற்றதை தொடர்ந்து தெலுங்கில் ரீமேக்காகி வருகிறது. த்ரிஷா கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடிக்கின்றார். விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சர்வானந்த் கதாநாயகனாக நடிக்கின்றார்.
இந்நிலையில் 96 படத்திற்கு தெலுங்கில் "ஜானகி தேவி" என பெயரிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதிகாரபூர்வமான தகவல்கள் வெளிவராத நிலையில் இதுதான் படத்தின் பெயர் என நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வந்துள்ளது.