சேலையில் தேவதைபோல் ஜொலிக்கும் 96 பட குட்டி ஜானு.. அவரா இது..? வைரலாகும் புகைப்படங்கள்..

சேலையில் தேவதைபோல் ஜொலிக்கும் 96 பட குட்டி ஜானு.. அவரா இது..? வைரலாகும் புகைப்படங்கள்..


96-movie-kutti-jaanu-saree-look-photos

சேலையில் தேவதைபோல் காட்சியளிக்கும் 96 பட குட்டி ஜானுவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை த்ரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது 96 திரைப்படம். பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு உருவான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த படத்தில் நாயகனாக விஜய் சேதுபதியும், நாயகியாக த்ரிஷாவும் நடித்திருந்தனர். அதேநேரம் இவர்களின் சிறுவயது கதாப்பத்திரத்தில் விஜய் சேதுபதியாக ஆதித்யாவும், சிறுவயது த்ரிஷாவாக கௌரி கிஷானும் நடித்திருந்தனர். இவர்கள் இருவரின் நடிப்பும் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது.

96 movie

அதேபோல் இந்த படம் மூலம் கௌரி கிஷானுக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். ஆனால் அதன்பிறகு எந்த தமிழ் படத்திலும் நடிக்காத இவர் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் சமூக வலைத்தளங்களிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சேலை அணிந்து தேவதை போல் ஜொலிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.