ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
96 படத்தில் நடித்த குட்டி ஜானு இப்போ என்ன பன்றாங்க தெரியுமா? இதோ!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பு வெளியன 96 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு உருவான இந்த திரைப்படத்தை ஒரு காதல் காவியமாக அனைவரும் கொண்டாடினார்கள். மேலும் இந்த படத்தின் வெற்றிவிழா சில நாட்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது.
படத்தில் பள்ளிப்பருவ விஜய் சேதுபதியாக பிரபல நடிகர் MS பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரன் பள்ளி பருவ திருஷாவாக கெளரி கிஷானும் நடித்திருந்தனர். படம் எந்த அளவிற்கு வெற்றிபெற்றதோ அதே அளவிற்கு ஆதியவும், கெளரி கிஷானும் பிரபலமானார்கள். இவர்கள் இருவரும் உண்மைலயே காதலிப்பதாக கூட பேசப்பட்டது. ஆனால் அது உண்மை இல்லை என இருவரும் மறுத்தனர்.
இந்நிலையில் பள்ளிப்பருவத்தில் நடித்த ஜானு புதிய மலையாள திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார். ஆம் அனுகிரஹித்தன் அந்தோனி என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார் குட்டி ஜானு. இந்த படத்தை பிரின்ஸ் ஜாய் என்ற மலையாள இயக்குனர் இயக்குகிறார். படத்தின் சூட்டிங் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.