இந்தியா சினிமா

கொரோனா அச்சுறுத்தல்! ராம், ஜானு மாதிரியே இருங்க! 96 பட குட்டி ஜானு வெளியிட்ட புகைப்படம்!

Summary:

96 movie actress post image about awarness of coronovirus

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனோ வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்த கொடூர கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியநிலையில், தற்போது 1600க்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் 309பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா பரவுவதை தவிர்க்க அரசு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் அனைவரும் சமூக விலகல் மேற்கொள்ள அறிவுறுத்தபட்டுள்ளனர். 

இந்நிலையில் 96, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை கௌரி கிஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 96 பட புகைப்படத்தை பகிர்ந்து கொரோனா வைரஸ் அச்சுறுத்திவரும் இந்த நேரத்தில் ராம் மற்றும் ஜானு போல இருங்கள் என  கேட்டுக்கொண்டுள்ளார். 


Advertisement