சினிமா

பயங்கர மாடர்னாக மாறிய 96 பட நடிகை குட்டி ஜானு! சூப்பர் லுக் புகைப்படம் உள்ளே!

Summary:

96 Movie actress gowri kissan modern look photo

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. மேலும், இருவருக்கும் இதுவரை இல்லாத அளவிற்கு இது ஒரு முக்கிய படமாக அமைந்தது. பள்ளிப்பருவ காதலை அழகாக உணர்வுப்பூர்வமாக எடுத்து சொன்ன இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தில் பள்ளிப்பருவ விஜய் சேதுபதியாக பிரபல குணசித்ர நடிகர் MS பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்திருந்தார். அதேபோல, திரிஷாவின் இளம் வயது தோற்றத்தில் நடித்தவர் கௌரி கிஷன் என்பவர் நடித்திருந்தார். இவருக்கும் பல விருதுகள் இந்த படத்திற்காக கிடைத்தது. 

96 திரைப்படம் மூலம் பிரபலமாகிவிட்ட இவருக்கும் வாய்ப்புகள் பல தேடி வருகிறது. இந்நிலையில் கெளரி கிஷன் கொச்சியில் நடக்கவுள்ள IFPL பேஷன் ஷோவில் Celebrity Show Stopperஆக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  அந்த விழாவில் அவர் ஹாட்டான உடையில் மிக மாடர்னாக போஸ் கொடுத்துள்ள போட்டோ வெளியாகியுள்ளது.


Advertisement