ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
கதாநாயகியாக நடிக்கும் 96 பட குட்டி ஜானகி! ஹீரோ யார் தெரியுமா?
விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் 96. பள்ளிப்பருவ காதலை அடிப்படையாக கொண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றது. படத்தில் த்ரிஷாவின் குழந்தை பள்ளி பருவ பெண்ணாக ஜானகி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் கௌரி கிஷன். விஜய்சேதுபதி கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரபல நடிகர் MS பாஸ்கரின் மகன் ஆதித்யா. இவர்கள் இருவரது நடிப்பும் அனைவராலும் பாராட்டப்பட்டது.
மேலும் இவர்கள் இருவரும் நிஜத்திலும் காதலிப்பதாக கூட செய்திகள் வந்தன. இந்நிலையில் பள்ளி பருவத்தில் த்ரிஷாவாக நடித்த கௌரி கிஷன் தற்போது ஒரு படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
கௌரி எந்த படத்தில் அடுத்து நடிக்க இருக்கிறார் என்ற அதிகார்ப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. கௌரி அடுத்து மலையாள சினிமாவில் கால் எடுத்து வைக்கிறார். அனுகிரஹித்தன் என்னும் இந்த படத்தில் பிரின்ஸ் ஜாய் இயக்கத்தில் நடிக்கிறார். மேலும் கௌரிக்கு ஜோடியாக சன்னி வேயின் நடிக்கிறார். 2019 ஆண்டு கோடைக்கால விடுமுறைக்கு இப்படம் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.