அடிவாங்கிய சோனுசூட்! செம கோபத்தில் குட்டி ரசிகன் செய்த ஷாக் காரியம்! பதறிய குடும்பத்தினர்!!7 year child broke tv for sonu sood

நடிகர் சோனு சூட்டின் தீவிர ரசிகரான 7 வயது குட்டி பையன் தனது பேவரைட் ஹீரோ அடி வாங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் டிவியை உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் குருவையா. இவருக்கு 7 வயதில் விராட் என்ற மகன் உள்ளார். இவர்கள் சங்காரெட்டி மாவட்டத்தில் உறவினர் ஒருவரது வீட்டுக்கு திருமணத்திற்காக சென்றுள்ளனர்.அங்கு சிறுவன் விராட் தூக்குடு  என்ற தெலுங்கு படத்தை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டு இருந்துள்ளான்.

Sonu sood

அப்பொழுது படத்தின் சண்டைக் காட்சியில் ஹீரோவான தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, படத்தின் வில்லன் சோனுவை கடுமையாக அடித்துள்ளார். அதனைக் கண்ட சிறுவன் விராட் பொறுத்து கொள்ளமுடியாமல் ஓடிச்சென்று கல்லை எடுத்து வந்து டிவியின் மீது வீசியுள்ளார்.

டிவி உடையும் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடிவந்து கேட்கையில் சோனு சூட்டிற்காக டிவியை உடைத்ததாக கூறியுள்ளார். இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இது தொடர்பான செய்தியை அறிந்த சோனு சூட், இதுபோன்று டிவியை உடைக்க வேண்டாம். பிறகு உங்கள் தந்தை என்னிடம்தான் டி.வி வாங்கி கொடுக்க சொல்லுவார் என்று சிறுவன் விராட்டுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.