46 வயது பிரபல நடிகைக்கு 31 வயதில் மகனா.? இத்தனை வருடம் கழித்து வெளியான சர்ச்சை..!

31 years old boy claims aishwarya rai is her mother


31 years old boy claims aishwarya rai is her mother

உலகளவில் பிரபலமான இந்திய நடிகைகளில் ஒருவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய். பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துள்ள இவருக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் தான் என தாய் என்றும், தான் அவருடன் வாழ ஆசைப்படுவதாகவும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் கர்நாடகாவை சேர்ந்த இளைஞர் ஒருவர்.

கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த சங்கீத் குமார் என்ற இளைஞர். 1988 -ல் லண்டனில் செயற்கை கருத்தரித்தலின் மூலம் 15 வயதான ஐஸ்வர்யா ராய் தன்னைப் பெற்றெடுத்ததாகவும், அதன்பின்னர் ஐஸ்வர்யா ராய்யின் பெற்றோர்தான் தன்னை வளர்த்து வந்ததாகவும், பின்னர் தனது தந்தை வடிவேலு ரெட்டி தம்மை விசாகப்பட்டினத்துக்கு கூட்டிச் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார் அந்த இளைஞர்.

Mystery

மேலும், ஐஸ்வர்யா ராய் தற்போது அவரது கணவருடன் சேர்ந்து வாழவில்லை என்றும், தாம் மும்பை சென்று ஐஸ்வர்யா ராயுடன் வாழ விரும்புவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நடிகர் தனுஷ்தான் எங்கள் மகன் என தம்பதியினர் ஒருபுறம் சர்ச்சையை கிளப்ப, தற்போது ஐஸ்வர்யாதான் என் அம்மா என இளைஞர் ஒருவர் புரளியை கிளப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், புகார் கூறியிருக்கும் அந்த இளைஞருக்கு தற்போது வயது 31 , ஐஸ்வர்யா ராய்யின் வயது 46 என்பது குறிப்பிடத்தக்கது.