சினிமா

இரண்டே நாளில் 100 கோடியை தாண்டிய சர்க்கார் வசூல்! தொடரும் சர்க்காரின் சாதனைகள்

Summary:

200 crore in 2 days sarkar

இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி தினமான நேற்று சர்க்கார் படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் படம் வெற்றிகரமாக ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் சர்கார் படத்தின் வசூல் இரண்டு நாட்களில் 100 கோடியை தாண்டிவிட்டது. இதுகுறித்து சமூகவலைத்தளங்களில் பல்வேறு விவரங்கள் பகிரப்பட்டு வருகின்றன. 

முதல் நாளில் தமிழ்நாடு அளவில் 33 கோடி வசூல் செய்திருப்பதாக டிரேடிங் வட்டார தகவல்கள் தெரிவித்தன. கேரளாவில் மட்டும் முதல் நாளில் 5.75 கோடியும், கர்நாடகாவில் 4.5 கோடியும், வட இந்தியாவில் 1.5 கோடியும், ஆந்திரா மற்றும், தெலுங்கானாவில் 2 கோடியும் வசூலாகியுள்ளது. ஆக மொத்தம் இந்தியா முழுவதும் சர்கார் படம் முதல் நாள் வசூலித்த தொகை 46.75 கோடி.

இதுமட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் சுமார் 15 கோடி வசூலாகியுள்ளதாகவும், அமெரிக்காவில் மட்டும் 5.5 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகின. எனவே அனைத்தையும் சேர்த்தால் சர்க்கார் படம் முதல் நாளில் வசூலித்த தொகை 62 கோடியாம்.

இதனைத்தொடர்ந்து தற்போது இரண்டாம் நாள் முடிவில் உலகம் முழுதும் சர்க்கார் எவ்வளவு வசூலை பெற்றுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் நாள் முடிவில் உலக அளவில் 110 கோடி வசூலையும் சென்னையில் மட்டும் 4.6 கோடி வசூலையும் பெற்றுள்ளதாக சர்க்கார் படக்குழு அறிவித்துள்ளது.

 


Advertisement