பட்ஜெட் படங்களுக்கு புதிய விடியல்; வந்தது ஓடிடி ப்ளஸ்.!



OTT Plus Platform to Use 

 

மிகக்குறைந்த பொருட்செலவில் உருவாகும் நல்ல படங்களுக்கு, கதையின் மீது நிலவும் நம்பிக்கையின்மை காரணமாக திரையில் பதிவு செய்ய வாய்ப்புகள் பெரிதாக கிடைப்பது இல்லை. 

இந்த விஷயம் திரையுலகில் நீண்ட நாட்களாகவே நீடித்து வந்தது. இந்நிலையில், தற்போது இந்த விசயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய ஓடிடி ப்ளஸ் எனப்படும் ஓடிடி தளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஓடிடி தளம் சிறிய அளவிலான பட்ஜெட் படங்களுக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த ஓடிடி நிறுவனத்தின் இயக்குனராக எம்.ஆர் சீனிவாசன், சுதாகர், கேபிள் சங்கர் ஆகியோர் பணியாற்றுகின்றனர். இந்த ஓடிடி தளத்தின் தொடக்க விழாவோடு, பெமினிஸ்ட, சென்டென்ஸ் ஆகிய குறும்படங்கள் திரையிடுதலும் நடந்தது. 

இந்த ஓடிடித்தளம் மிகக்குறைந்த விலையில் மாதம் ரூ.29 செலுத்தில் அதில் பதிவு செய்யப்படும் விடீயோக்களை பார்க்கும் வசதியை ஏற்படுத்தி கொடுப்பதாக நிர்வாகத்தரப்பு தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக சிறிய அளவிலான பட்ஜெட் படங்களும் மக்களின் பார்வைக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.