சமுத்திரக்கனியால் இயக்குனராக களமிறங்கிய பிரபலம்; மனதார நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி.!



Samuthirakani ramam Ragavam Movie Director 

 

நடிகர்கள் சமுத்திரக்கனி, தனராஜ், ஹரிஷ் உத்தமன், சத்யா, பிரமோதினி, ஸ்ரீனிவாஸ் ரெட்டி உட்பட பலர் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் ராமம் ராகவம். சிலேட் பென்சில் ஸ்டோரீஸ் தயாரிப்பில், தனராஜ் கொரனனி இயக்கத்தில், அருண் சிலுவெரு இசையில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.

கடந்த ஏப்ரல் 27 படத்தின் டீசரும் வெளியான நிலையில், சமீபத்தில் படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது மனம் திறந்து பேசிய இயக்குனர் தனராஜ், சமுத்திரக்கனியை தனது தந்தை ஸ்தானத்தில் வைத்துள்ளதாக புகழ்ந்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், "நான் ஒரு ஆக்சிடண்டால் இயக்குனர். நான் ஒரு எழுத்தாளர் சிவப்ரசாத்திடம் இருந்து கதை கேட்டேன். அவரின் கதையில் நான் சமுத்திரக்கனியை பார்த்தேன். உடனடியாக அவருக்கு தொடர்பு கொண்டு பேசினேன். நல்ல கதை கேட்டதாக கூறினேன். பின் நானும், அண்ணனும் பேசி படத்தை எடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்தோம். 

அண்ணன் என்னை ஊக்குவித்தது, படத்தில் நடிக்கவும் வைத்து, இயக்குனராகவும் மாற்றியுள்ளார். நான் பல படங்களில் நடித்திருந்தாலும், இயக்கத்தில் பணியாற்றி இருந்தாலும், எனது இயக்கத்தில் முதல் படம் இது. இப்படத்திற்கு நேரம் ஒதுக்கிக்கொடுத்த கனி அண்ணனுக்கு நன்றி. அவரை அண்ணன் என்ன சொல்வதை விட அப்பா எனவும் கூறலாம். எனக்கு அப்பாவாக நான் அவரை கருதுகிறேன்" என நெகிழ்ச்சியுடன் பேசினார்.