இந்தியன் 2 படப்பிடிப்பில் நேர்ந்த பெரும் விபத்து! பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி இழப்பீடு!

இந்தியன் 2 படப்பிடிப்பில் நேர்ந்த பெரும் விபத்து! பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு கோடி இழப்பீடு!


1-crore-compensation-for-families-who-dead-in-shooting

லைகா நிறுவனம் தயாரிப்பில் பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்க கமல் நடிப்பில் உருவாகிவரும் படம் இந்தியன் 2. இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியில் உள்ள ஈவிபியில் நடைபெற்றது. அப்பொழுது கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி ராட்சத கிரேன்கள் மூலம் பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் நடைபெற்றநிலையில், எதிர்பாராதவிதமாக கிரேன் அறுந்து விழுந்தது. அந்த விபத்தில் சங்கரின் இணை இயக்குனர் கிருஷ்ணா, உதவி நடன இயக்குனர் சந்திரன்,  உதவி இயக்குனர் மது 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

shooting spot

இந்த விபரீத சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் சங்கர் உள்ளிட்டோர் தலா ரூ.1 கோடி  இழப்பீடு வழங்கியுள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கமல்ஹாசன், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து மிகவும் மோசமான கசப்பான அனுபவம். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டோம். இதுபோல் இனிமேல் எந்த விபத்தும் நிகழாமல் இருக்க பல நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகின்றோம். மேலும் வெளிநாடுகளில் பயன்படுத்தும் பாதுகாப்பு கருவிகள் குறித்தும் கலந்தாலோசித்துள்ளோம். சட்டதிட்டங்களின் படி நடப்போம் என கூறியுள்ளார்.