ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
கனவில் தான் இனி தங்கம் வாங்குவது போல! ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை...
இந்திய சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பது பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளது. ஆண்டு தொடக்கம் முதலே விலை வேகமாக அதிகரித்து, சாதாரண மக்களுக்கு தங்கம் வாங்குவது கனவாக மாறியுள்ளது.
தங்கம் விலை உயர்வு
இன்று (செப்டம்பர் 26) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.10,550-ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.84,400-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வு காரணமாக திருமணம் மற்றும் முதலீட்டுத் தேவைகளுக்கான வாங்குதல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கத்துடன் வெள்ளியும் சாதனை உயர்வைச் சந்தித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3 அதிகரித்து ரூ.153-ஆகவும், ஒரு கிலோ ரூ.1,53,000-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வெள்ளியில் முதலீடு செய்வோர் கூட கவலை அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஷாக் நியூஸ்! போற போக்க பார்த்த இனி கனவுல தான் தங்கம் வாங்குறது போல....ஒரே நாளில் ரூ. 480 உயர்வு!
நிபுணர்கள் கருத்து
நிபுணர்கள், அடுத்த சில மாதங்களில் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.1 லட்சத்தை எட்டும் வாய்ப்பு உள்ளதாகவும், விலை நிலைமை உலக சந்தை மாற்றங்களால் தீர்மானிக்கப்படும் எனவும் கூறுகின்றனர்.
இந்த நிலவரம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை மணி போல உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலை ஆகியவை தொடர்ந்து உயர்வதால், முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் பொருளாதாரத்தில் கூடுதல் சுமையை அனுபவிக்க நேரிடும் நிலை உருவாகியுள்ளது.
இதையும் படிங்க: நகை வாங்கணுமா! கடைக்கு ஓடுங்க...இன்று கொஞ்சம் குறைந்தது! நாளை என்னவோ! இன்றைய தங்கம் விலை நிலவரம்!