நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
இது புதுசா இருக்கே.. திருடருக்கே கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய குடியிருப்பாளர்கள்! வைரலாகும் வீடியோ...
டெல்லியில் நடந்த ஒரு அதிர்ச்சியையும் நகைச்சுவையையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்திய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. திருட வந்த ஒருவரின் பிறந்தநாள் விழா, அதே இடத்தில் ஏற்பாடு செய்து கேக் வெட்டிய குடும்பத்தினர்.
அடுக்குமாடி வீட்டில் சிக்கிய திருடன்
நகரத்தின் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் திருட முயன்ற ஒருவர் அங்கிருந்த குடியிருப்பாளர்களிடம் வசமாக பிடிபட்டார். கையில் எந்த ஆபத்தும் ஏற்படாத வகையில், அந்த திருடன் தன்னை விடுவிக்க வேண்டி, “இன்று எனது பிறந்தநாள்... என்னை மன்னித்து விடுங்கள்” என கெஞ்சினார்.
திருடருக்கே கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்
அந்த நேரத்தில் குடியிருப்பாளர்கள் செய்யும் செயல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. காவல்துறைக்கு அழைக்காமல், அவர்கள் திருடன் என எழுதப்பட்ட கேக்கை ஆர்டர் செய்து, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் பாடி கொண்டாடினர். இது உண்மையில் ஒரு நகைச்சுவையான திருப்பமாக அமைந்தது.
பிறகு காவல்துறையிடம் ஒப்படைப்பு
பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்ததும், அந்த திருடன் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் அதற்கு நகைச்சுவை கலந்த விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: எமனாக வந்த தனியார் பேருந்து! மழைக்காக பஸ்ஸ்டாப்பில் காத்திருந்த பெண்கள் மீது மோதியது ! பதறவைக்கும் சிசிடிவி காட்சி...