
கடந்தாண்டு விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கின் விசாரணை முடிவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்ட தன்ராஜிக்கு 12 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தும், அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி லிங்கேஸ்வரன் கூறினார்.
இந்த தன்ராஜ் செய்த வேலையை கேட்டால் அனைவரின் மனதும் கண்டிப்பாக படபடக்கும். அப்படி என்ன செய்தேன் அந்த காமக்கொடூரன்:
விருத்தாசலம் தாலுகா கோ.ஆதனூர் வடக்கு காலனியை சேர்ந்த தாய் இல்லாத சிறுமி தனது தந்தையின் பராமரிப்பிலேயே வளர்ந்து வந்தாள். குடும்பத்தின் வறுமை காரணமாக கூலி வேலைக்கு போக வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் தனக்கு சித்தப்பா உறவு முறையான தன்ராஜ் உடன் கட்டிட வேலைக்கு சென்றுள்ளார். ஒருநாள் இரவு சிறுமியை கோ.ஆதனூரில் உள்ள கரும்புதோட்டத்துக்கு வரவழைத்த தன்ராஜ், சிறுமியின் வாயில் துணியை வைத்து அமுக்கி பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதனைப்பற்றி யாரிடமாவது கூறினால், உன் தந்தையை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதால் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் கூறவில்லை. மேலும் சிறுமியின் தந்தையும் வேலை சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவதால், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தாள்.
தன்ராஜ், உறவு முறையில் தனது மகள் என்று கூட பாராமல் அந்த சிறுமியை வீட்டில் வைத்தும், கரும்பு தோட்டத்துக்கு அழைத்து சென்றும், வேலைக்கு செல்லும் இடங்களிலும் என கடந்த ஒரு ஆண்டாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் தன்ராஜின் காமப்பசிக்கு இரையான சிறுமி கர்ப்பம் அடைந்தாள். இந்த விவகாரம் வெளியே தெரிந்தால் தனக்கு அவமானம் ஆகி விடும் என்பதை அறிந்த தன்ராஜ், கருவை கலைக்க முடிவு செய்தார். அதன்படி தனது வயிற்றில் சிசு வளர்வது பற்றி அறியாத, சிறுமிக்கு மாத்திரைகள் வாங்கி கொடுத்து கருக்கலைப்பு செய்தார்.
இதற்கிடையே சிறுமியின் உடலில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதை அறிந்த அவளது தந்தை சிறுமியிடம் விசாரித்தார். ஆனால் தன்ராஜின் மிரட்டலுக்கு பயந்து, அவரிடம் எதையும் கூறாமல் மறைத்தாள். பின்னர் அவளது அக்கா வந்து விசாரித்தபோது, சித்தப்பா தன்ராஜ் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததை கூறி கதறி அழுதாள்.
இதுகுறித்து கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட சிறுமி விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த வழக்கின் விசாரணை தற்பொழுது முடிவிற்கு வந்துள்ளது. இதையடுத்து தன்ராஜ், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Advertisement
Advertisement