வயதாகிவிட்டதே நம்மால் அதை செய்ய முடியுமா என சந்தேகமா! இத படிங்க கண்டிப்பா புத்துணர்ச்சி கிடைக்கும்

வயதாகிவிட்டதே நம்மால் அதை செய்ய முடியுமா என சந்தேகமா! இத படிங்க கண்டிப்பா புத்துணர்ச்சி கிடைக்கும்


don't worry about age

நமது சமுதாயத்தில் வயதான தம்பதிகள் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது என்பது மிகவும் குறைவான எண்ணிக்கையிலே இருக்கும். இதற்கு காரணம் பிள்ளைகள் வளர்ந்தவுடன் கணவன் மனைவி தனியாக இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமைவதில்லை. அதோடு மட்டுமல்லாமல் உடலளவில் சோர்வும் மனதளவில் நிம்மதியற்ற சூழலும் அமைவதே காரணம். ஆனால் மனிதர்களை பொருத்தவரை பாலியல் ஆசை என்பது சாகும்வரை மறைவதில்லை.

வயதான பெண்களை பொறுத்தவரை மாதவிடாய் நின்ற பின் அவர்களில் உடலுறவுக்கான ஆசைகளும் நின்றுவிடும் என பலர் எண்ணுகின்றனர். ஆனால் அது உண்மையில்லை, மாறாக உடலுறவுக்கான ஆசை தொடர்ந்துகொண்டே தான் இருக்கும். ஆகவே, மாதவிடாய் நிற்பது என்பது பாலுறவுக்குத் தடையில்லை.

dont worry about age

மாதவிடாய் நிறுத்தம் என்பது பெண்களின் குழந்தை பெரும் திறனுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறதே தவிர பாலியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி அல்ல. எனவே, முன்பைப் போலவே எப்போதெல்லாம் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஈடுபடலாம். உடலுறவு கொள்வதால் கீழ் இடுப்புப் பகுதித் தசைகளை வலிமை அடைகின்றன, மன அழுத்தத்தைக் குறைக்கிறது, நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது, உயிருக்கே ஆபத்தான மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பைக் குறைக்கிறது. ஆகவே, எவ்வளவு காலம் வரை முடிகிறதோ, அதுவரை நீங்கள் தாராளமாக உடலுறவில் ஈடுபடலாம்.

ஆரோக்கியமான, சுறுசுறுப்பான வாழ்க்கை முறை வாழ்வதால் ‘நல்ல உணர்வைக் கொடுக்கும்’ ஹார்மோன்கள் உடலில் சுரக்கும். இவை நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கவும் உடலை வலிமையாக வைத்திருக்கவும் உதவும். ஊட்டச்சத்துள்ள உணவுப் பழக்கம், போதிய உறக்கம், மது, புகை, போதைப் பொருள் போன்றவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்தல் போன்ற வழிமுறைகளின் மூலம் இன்னும் உங்கள் உடல் வலிமையை அதிகப்படுத்தலாம். 

dont worry about age

உணர்வுரீதியான வலிமை பெற, ஆழ்ந்து சுவாசித்தல், யோகா, ஓவியம் வரைதல், நடனம் போன்ற ஏதேனும் செயல்பாடுகளில் ஈடுபடுதல் போன்றவற்றைச் செய்யலாம். இவற்றால் பலன் கிடைக்காவிட்டால் மருத்துவ ஆலோசகரிடம் சென்று ஆலோசனை பெறத் தயங்க வேண்டாம்.