உலகம்

மூதாட்டிகளை காதலித்து உறவு கொள்ளும் இளைஞன்!. வைரலாகும் புகைப்படங்கள்!.

Summary:

young man love and live with old lady

.
கனடாவை சேர்ந்த 31 வயது இளைஞர் அமெரிக்காவை சேர்ந்த 91 வயது மூதாட்டியை காதலித்து வருகிறார். அமெரிக்காவில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்று நடத்தி வரும் நிகழ்ச்சியில் இதுபோன்று வினோதமாக இருக்கும் காதலர்களை படம்பிடித்து காட்டுகின்றனர்.

அதில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஒரு காதல் ஜோடி தான், கைல் ஜோன்ஸ் (31) - மார்ஜோரி மெக்குல் (91) என்பவர்கள். இருவருக்கும் இடையே 60 வயது வித்யாசம் இருக்கும். ஆனால் அவர்களுக்கு ஏற்பட்ட காதலை பற்றி அனைவரும் வியப்பாக பார்த்து வருகின்றனர். இவர்கள் முத்தமிட்டுக்கொள்ளும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது. 

இதுபற்றி ஜோன்ஸ் கூறுகையில், எனக்கு இது முதல்முறை அல்ல. நான் ஏற்கனவே 70, 80 மற்றும் 90 வயதுள்ள பெண்களுடன் டேட்டிங் சென்று அவர்களுடன் உறவு கொண்டுள்ளேன். 

ஒரு சில ஆண்களுக்கு வயதான பெண்களை தான் பிடிக்கும். அதை போல தான் எனக்கும், வயதானவர்களை பிடித்ததால் அவர்களுடன் டேட்டிங் செய்கிறேன் என ஓப்பனாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மார்ஜோரி கூறுகையில், ஜோன்ஸ் என்னை காதலிப்பதாக கூறியபோது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. நான் ஆரம்பத்தில் அவனை என்னுடைய ஒரு மகன் போல தான் நினைத்தேன். பிறகு பழக ஆரம்பித்ததும், அவனை மிகவும் பிடித்துவிட்டது என தெரிவித்துள்ளார்.


Advertisement