இரத்த வியர்வை வேர்க்கும் அற்புதம் நிறைந்த 21 வயது இளம் பெண்- இந்த வியர்வைக்கு இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சித் தகவல்!

இரத்த வியர்வை வேர்க்கும் அற்புதம் நிறைந்த 21 வயது இளம் பெண்- இந்த வியர்வைக்கு இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சித் தகவல்!



young-girl-with-different-dieases

பொதுவாக ஒரு சிலரது வாழ்வில் சில அதிசயங்கள் நடந்து இருக்கும். அதிலும் மருத்துவ உலகில் சில விஷயங்கள் வினோதமாக நடைபெறும். இதனை ஆங்கிலத்தில் "மெடிக்கல் மிராக்கிள் "என்று கூறுவர். அதுபோல ஒரு வினோத சம்பவம் தான் 21 வயது பெண்ணுக்கு நிகழ்ந்திருக்கிறது.

21 வயது நிரம்பிய பெண் ஒருவருக்கும் ஒரு வித்யாசமான பிரச்சனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தால். பிரச்சனை என்னவெனில் அவருக்கு வியர்க்கும் போது அவருடைய முகம், உள்ளங்கை போன்ற இடங்களில் வியர்வை ரத்தமாக வெளியேறுகிறது.

இதனை கேட்பதற்கும் நம்ப முடியாமல் இருந்தாலும் இது ஒரு உண்மை நிகழ்வு ஆகும். இப்படி சில வழக்குகள் மிகவும் அரிதாக மருத்துவ வரலாற்றில் காணப்படுகிறது.இத்தாலியை சேர்ந்த மருத்துவர்கள் அப்பெண்ணை பரிசோதித்து முதலில் அவரும் மிகுந்த குழப்பத்தில் இருந்தனர். 

doctor

மேலும் அந்தப் பெண்ணின் சருமத்தில் ரத்தம் வெளியே வருவதற்கான எந்த ஒரு காயமும், அடியும் அப்பெண்ணின் உடலில் இல்லை. அதிலும் அப்பெண் தூங்கும்போது மிக அதிகப்படியான ரத்தம் வெளியேறுவதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இப்படி வியர்வையாக ரத்தம் கடுமையாக வெளியேறுவதை கண்ட அந்த பெண் மிகவும் மனச் சோர்வுடன் காணப்பட்டார். அவருடைய வழக்குப்பற்றி கன்னட மருத்துவ நிறுவன பத்திரிக்கையில் செய்திகள் வெளிவந்தன.

அந்த பத்திரிகையில் அந்த பெண்ணிற்கு கடந்த 3 ஆண்டுகளாக இப்பிரச்சனை இருப்பதாகவும், இவ்வியர்வை அவருக்கு ஒன்றிலிருந்து ஐந்து நிமிடங்கள் வரை நீடிப்பதாகவும் கூறி உள்ளனர்

இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கிய காரணம், அந்தப் பெண்ணுக்கு ஹெமடோஹிட்ராஸிஸ் (hematohidrosis)  என்ற பாதிப்புதான்  என்பது கண்டறியப்பட்டது.

doctor

இந்த வகை பாதிப்பு பத்து மில்லியன் மக்களில் ஒருவரை மட்டுமே பாதிக்கக்கூடிய வியாதியாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் இவ்வியாதியை குணப்படுத்த கூடிய மருந்துகள் அப்பெண்ணுக்கு கொடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

ஆனால் இவ்வியாதியை முற்றிலும் குணப்படுத்த முடியாது எனவும் கூறியுள்ளனர்.மருந்துகளை வைத்து ஓரளவு கட்டுப்படுத்த முடியுமே ஒழிய முழுமையாக குணமாக்க இயலாது எனவும் கூறியுள்ளனர்.

இந்த நோய் பாதிப்பிற்கான காரணம் பற்றி முற்றிலும் தெரியவில்லை என்றாலும், மிக அதிக அழுத்தம் மற்றும் பயம் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.