கொரோனா பாதிப்பால் உயிரிழந்த இளம்வயது பயிற்சியாளர்! கடும் சோகத்தில் கால்பந்து வீரர்கள்!



young-football-coach-dead-in-spanish

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் உயிரைக் குடிக்கக்கூடிய இந்த கொடிய வைரசால் உலக நாடுகளில் இதுவரை 7000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் மலாகா பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ கார்சியா என்ற 21 வயது நிறைந்த இளைஞர் ஜூனியர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்து வந்தார். இவர் சமீபத்தில் கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அவருக்கு ரத்த புற்றுநோய் இருப்பது தெரிய வந்துள்ளது.

Coronovirus

இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார். ஸ்பெயின் நாட்டில் கொரோனோவால் பாதிக்கப்பட்ட இளம்வயது நபர் இவராவார். மேலும் இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது தற்போதே  கண்டறியப்பட்டுள்ளது. முன்கூட்டியே மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்தால் அவரது உயிரை காப்பாற்றியிருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.