கொரோனா வைரஸ் ஒரு வதந்தி என நினைத்து கொண்டாடப்பட்ட கொரோனா பார்ட்டி! நிகழ்ச்சியில் பங்கேற்ற இளைஞனின் உயிரை பறித்த கொரோனா!



young-boy-died-after-corona-party

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. 

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்த போதும் அந்நாட்டு மக்கள் பலரும் அந்த கொடூர வைரசின் தீவிரத்தன்மையை உணராமலும், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் சுற்றித்திருந்து வருகின்றனர். இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா வைரசில் இருந்து குணமடைந்தவர்களில் சில இளைஞர்கள் விபரீத விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். 

corona

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர், ‘கோவிட்-19’ என்ற பெயரில் கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். கொரோனா வைரஸ் எல்லாம் வதந்தி என்றுகூறி அந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. அதை நம்பி டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் பங்கேற்றுள்ளார். மேலும், தான் ஒரு இளைஞர் என்பதால் தன்னை கொரோனா வைரஸ் பாதிக்காது என்றும், அவ்வாறு கொரோனா தொற்று வந்தாலும் குணமடைந்துவிடுவோம் எனவும் நினைத்துக்கொண்டு இருந்துள்ளார்.

இந்தநிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அறிகுறிகள் எதுவும் தென்படாமல் அவர் இருந்துள்ளார். ஆனால் பின்னர் அவரது ஆக்சிஸன் அளவு முற்றிலும் குறைந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா வைரஸால் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரைப் போன்று கொரோனாவை அலட்சியமாக நினைத்துக்கொண்டிருந்த அமெரிக்க இளைஞர்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.