உலகை சோகத்தில் ஆழ்த்திய சிரியா சிறுவனின் மரணம்! காரணமான 3 பேருக்கு 125 ஆண்டுகள் சிறை!

இந்த உலகத்தையே சோகத்தில் ஆழ்த்திய மரணங்களில் ஓன்று 3 வயது குழந்தை அய்லான் குர்தியின் மரணம். சிரியா நாட்டில் நடந்த உள்நாட்டு போர் காரணமாக அந்நாட்டு மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்தனர்.
பெரும்பாலும், மத்திய தரைக்கடல் வழியாக பயணம் செய்த இவர்கள் பெரும்பாலான நேரங்களில் விபத்துகளையே சந்தித்துள்ளனர். அதில் ஒன்றுதான் 3 வயது சிறுவன் அய்லானின் மரணம். கடந்த 2015 ஆம் ஆண்டு சிறுவன் அய்லான் உட்பட 12 பேர் மத்திய தரைக்கடல் வெளியாக துருக்கி நாட்டிற்கு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் ஒன்றும் தெரியாத 3 வயது சிறுவன் அய்லான் கடற்கரை ஓரத்தில் முகம் புதைந்து இறந்து கிடந்தான்.
சிறுவனின் புகைப்படம் உலகளவில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையியல், சட்டவிரோதமாக அவர்களை அழைத்துச்சென்ற மூவரை துருக்கி போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவந்தனர். 5 ஆண்டுகளாக நடந்த இந்த விசாரணையில், கைது செய்யப்பட்ட மூவரும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், குற்றவாளிகள் மூவருக்கும் தலா 125 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது துருக்கி நீதிமன்றம்.