இந்தியா உலகம் மருத்துவம் Covid-19 Corono+

கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டும் பலன் தராது! உலக சுகாதார அமைப்பு என்ன தெரிவித்துள்ளது.?

Summary:

World health department talk about corona

கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டும் பலன் தராது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலக அளவில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா அச்சுறுத்தலால் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தபட்டு வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளனர் மக்கள். இந்தியாவில் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில், கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே பலன் தராது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயேசுஸ் கூறுகையில், கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே பலன் தராது. 


ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் கொரோனாவை ஒழிக்கும் பணியில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். கடுமையான  நடவடிக்கைகள்,சோதனைகள் ஆகியவை கொரோனா தொற்றைக் கண்டறிய சிறந்த வழியாக மட்டுமல்லாமல் கொரோனா வைரஸை தடுக்கவும் சிறந்த வழியாக உள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவரிடம் இருந்து யாருக்குத் தொற்று பரவியது என்பதைக் கண்டறிய தெளிவான திட்டம் தேவை எனக் கூறினார்.


Advertisement