உலகம் மருத்துவம்

மது அருந்தினால் கொரோனா பரவாது என்பது உண்மையா? உலக சுகாதார அமைப்பு கூறுவது என்ன?

Summary:

Will alchohol kills corono virus

இன்று உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸால் சீனாவில் மட்டும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை  3,300ஆக  உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,711 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை  உலகம் முழுவதும் 98,192 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை அழிப்பதற்கான மருந்தினை இதுவரை யாரும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் கொரோனா தாக்காமல் இருக்க என்னவெல்லாம் செய்யலாம் என பல நிபுனர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதில் மது அருந்தினாலோ அல்லது மதுவை உடலில் தெளித்துக்கொண்டாலோ கொரோனா வைரஸ் பரவாது என்ற தகவலும் சில நாட்களாக பரவி வருகிறது. ஆனால் இது தவறானது, மதுவினால் கொரோனாவை குணப்படுத்த முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


Advertisement