2 ஆண்டுகளில் அதிதீவிரமாக பரவும் ஜாம்பி X வைரஸ்... பின்னணி இதுதான்.. WHO தந்த பகீர் தகவல்..!

2 ஆண்டுகளில் அதிதீவிரமாக பரவும் ஜாம்பி X வைரஸ்... பின்னணி இதுதான்.. WHO தந்த பகீர் தகவல்..!



who-warning-about-disease-x

 

உலகளவில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் உட்பட பல்வேறு விஷயங்களை கண்காணித்து, உலக நாடுகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி வரும் உலக சுகாதார அமைப்பு, சமீபத்தில் Disease X என்பது விரைவில் பரவவுள்ளது என்று எச்சரித்தது. 

இந்த நோய் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் தொற்று நோய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. WHO-வின் கூற்றுப்படி இந்நோய் இதுவரை அறியப்படாத கிருமி ஆகும். 

இதனால் பெரியளவிலான பாதிப்புகள் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு அறியபடாத நோய்க்கு Disease X என்று உலக சுகாதார அமைப்பு (WHO) பெயர் வைத்தது. 

​​​​​WHO

அதே வேளையில், ஓராண்டு கழித்து கொரோனா வைரஸ் என்ற கோவிட்19 உலகளவில் பரவியது. இதற்கிடையில் ஆபத்தான வைரஸ் பட்டியலில் டிசீஸ் X சேர்க்கப்பட்டுள்ளது. 

இது உலகளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்றும், இந்த புதிய வைரஸ் ஜாம்பி வைரஸாக இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இன்றளவில் உள்ள காலநிலை மாற்றம் காரணமாக ஜாம்பி வைரஸ் அபாயம் இருக்கிறது என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து இருக்கின்றனர்.