இந்திய வீரர்களை தாக்க சீன ராணுவம் பயன்படுத்திய ஆயுதங்கள் இது தான்! வெளியான புகைப்படம்!



weapons-used-by-the-chinese-military


இந்தியா சீனா எல்லையில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் இரு நாட்டு இராணுவத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த செய்தி நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களாக லடாக் எல்லைப்பகுதியில் இந்திய, சீன ராணுவத்தினருக்கு இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்த சூழலில், இந்திய ராணுவத்தினர் மீது சீன ராணுவத்தினர் திங்கள்கிழமை இரவு நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர். 

India

இந்நிலையில் இந்த தாக்குதலில் சீனர்கள் பயன்படுத்திய ஆயுதங்களின் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இரும்புக் கம்பியில் ஆணி பொருத்திய ஆயுதங்களைக் காட்டுகிறது அந்த புகைப்படம். அந்த படத்தில் இருக்கும் ஆயுதங்களை சம்பவ இடத்தில் இருந்து இந்திய வீரர்கள் கைப்பற்றியதாகவும், இவற்றைக் கொண்டே ரோந்து சென்ற இந்தியப் படையினரை சீனப் படையினர் தாக்கியதாகவும், 20 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறப்படுகிறது.

பிரபல செய்தி ஊடகத்திற்கு மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் இந்தப் படத்தை அனுப்பியதாக அந்த செய்தி நிறுவனம் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. ஆனாலும் இதுவரை இந்த புகைப்படம் குறித்து இந்திய அரசோ அல்லது சீன அரசோ ஏதும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.