உலகம் டெக்னாலஜி

வாட்ஸ் ஆப்பில் இதெல்லாம் செஞ்சா.. கண்டிப்பா கைது உறுதி.!

Summary:

watsup new rules in 2019 - police enquery case

உடனுக்குடன் தகவல்களை பரிமாறிக்கொள்ள வாட்ஸாப் மிகவும் உதவியாக உள்ளது. facebook நிறுவனம் வாட்ஸப்பை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதுவரை உலகம் முக்குவதும் 100 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாட்ஸப்பை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி வாட்ஸ் அப்பில் சட்டத்திற்கு புறம்பான வகையில் தகவல்கள் பகிரப்பட்டு இருந்தால் பிரச்சனை எழும் சூழலில் அது சம்பந்தமான விபரங்களை போலீசார் கேட்கும்போது வாட்ஸப் நிறுவனம் தருவதாக தெரிவித்துள்ளது.

Image result for whatsapp images

வன்முறையை தூண்டும் தகவல்கள் பகிரப்பட்டு டெலிட் செய்திருந்தாலும் அது தொடர்பான விபரம் வாட்ஸ் அப் நிறுவனத்தில் இருக்கும் என்பதால் வாடிக்கையாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வாட்ஸ் அப் நிறுவனத்தால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள், கருத்துகள் வாட்ஸ்-அப் மூலம் பகிரப்பட்டால் நிச்சயம் கைது செய்யப்படுவர்.

குழு உறுப்பினர் யாரேனும் தவறாக நடந்து கொண்டால், வாட்ஸ்-அப் குரூப் அட்மின் கைது செய்யப்படலாம்.

Image result for whatsapp images

போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை வாட்ஸ்-அப் மூலம் விளம்பரப் படுத்தவோ, விற்கவோ முயன்றால் கைது செய்யப்படுவர்.

உடலை மையப்படுத்திய வியாபாரம், விபச்சாரம் போன்ற தகவல்களை வாட்ஸ்-அப் மூலம் பகிர்ந்து கொண்டால் கைது நிச்சயம்.

முக்கிய பிரபலங்களை மார்பிங் செய்து, அந்த புகைப்படங்களை வாட்ஸ்-அப்பில் பகிர்ந்தால் கைது செய்யப்படலாம்.

பெண்களை சீண்டும் வகையில், துன்புறுத்தும் வகையில் வாட்ஸ்-அப் தகவல் பரிமாற்றம் இருந்தால் கைது நடவடிக்கை உண்டு.

Related image

எந்தவொரு மதம் அல்லது கோவில் தொடர்பாக பிறர் புண்படும் படி தகவல் பரிமாற்றம் செய்தால் கைது செய்யப்படலாம்.

வேறொரு நபரின் பெயரில் வாட்ஸ்-அப் கணக்கை வைத்திருந்தால் கைது செய்யப்பட வாய்ப்புண்டு.

மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலான, போலிச் செய்திகள், பொய் தகவல்கள் பரப்பினால் கைது செய்யப்படுவர்.

குறிப்பிட்ட நபரை சட்டவிரோதமாக வீடியோ எடுத்து பகிர்ந்தால் கைது நடவடிக்கை உண்டு.


Advertisement