உலகம்

டம்ளரில் இருப்பது தண்ணீர் என நினைத்து குடித்த நபர்! கடைசியில் நடந்தது என்ன தெரியுமா?

Summary:

Water

உடற்பயிற்சி கூடம் ஒன்றில் ஒரு 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தீவிரமாக உடற்பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வந்துள்ளார். அவர் ஒரு புறம் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொள்ள அவரின் பின்புறம் ஒரு டம்பளர் இருந்துள்ளது. 

பின்னால் இருந்த டம்ளரில் தண்ணீர் இருப்பது போன்று தெரிந்துள்ளது. இந்நிலையில் அந்த உடற்பயிற்சி கூடத்திற்கு வந்த மற்றொரு நபர் பின்னால் இருந்த டம்பளரில் தண்ணீர் தான் இருக்கிறது என்று நினைத்து யாருக்கும் தெரியாமல் எடுத்து குடித்து விட்டு செல்கிறார். 

அதன் பின்னர் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்ட நபர் உடற்பயிற்சி பிறகு தனது டவலை எடுத்து உடலில் உள்ள வியர்வை துளிகளை துடைத்து அந்த டம்பளரில் சேமிப்பு தெரியவந்துள்ளது. 

இதனை வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இதற்கு ஒரு டம்பளர்  விஷத்தை குடித்திருக்கலாம் என கிண்டல் செய்து பதிவிட்டுள்ளனர். குறித்த காட்சி அனைவரையும் முகம்சுழிக்க வைத்துள்ளது. 

 

 


Advertisement