ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
பக்கத்து ஸ்டேட்காரனே காரி துப்புறான்! கரூர் விஜய் வீடியோவை வைத்து கேரளா இளையர் செய்த செயல்...வைரலாகும் வீடியோ!
தமிழக அரசியலில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாறி வருகிறது. குறிப்பாக கரூர் சம்பவம் தொடர்பான சமீபத்திய சர்ச்சை, சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் வீடியோ மீது கடும் விமர்சனம்
கரூர் துயரச் சம்பவத்தில் மக்கள் உயிரிழந்த சூழ்நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக்கழகத் தலைவருமான விஜய் அளித்த வீடியோ, உணர்ச்சி பூர்வமில்லாமல், சினிமா பாணியில் இருந்ததாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. பொதுமக்கள் மட்டுமல்லாது, எதிர்க்கட்சித் தலைவர்களும், அரசியல் விமர்சகர்களும் இதனை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
கேரள நபரின் தாக்கமான விமர்சனம்
இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த ஒருவர், அந்த வீடியோவை பார்த்து கிண்டலாக சிரித்ததோடு, கடுமையான விமர்சனத்தையும் வெளியிட்டுள்ளார். குறிப்பாக, “நீங்கள் முதல்வரிடம் சினிமா வசனம் மாதிரியான சவால் விடுகிறீர்கள். அதற்கெல்லாம் கைத்தட்டும் உங்கள் தொண்டர்களுக்கு அறிவே இல்லையா?” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “அவன் நடிக்கிறான் டா… அரசியல் செய்யறதல்ல டா!” என்ற கூற்றும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: என்னது... விஜய்யின் 5 மணி மாநாடு பேச்சுக்கு இதுதான் காரணமா? விஜய்- க்கு 6 மணிக்கு அப்புறம் இந்த வீக்கனஸ் இருக்கா!
சமூக வலைதளங்களில் பெரும் விவாதம்
அந்த நபர் மேலும், “உங்கள் வாழ்க்கையை ஒரு நடிகனின் பின்னால் சென்று தொலைத்துக் கொள்ளாதீர்கள். அவர் பண்ணது தவறு, நேர்மையற்றது” எனத் தெரிவித்தார். இதையடுத்து, சமூக வலைதளங்களில் “பக்கத்து மாநிலத்தவரே உண்மையைச் சொல்கிறார்” எனும் கருத்துகள் பரவலாக வெளிப்படுகின்றன. “நாம் தான் சினிமா மோகத்தால் பாதிப்பை ஏற்படுத்தியவரையே மீண்டும் ஆதரிக்கிறோம்” என்ற வருத்தமும் அதிகரித்து வருகிறது.
இந்த சர்ச்சை, தமிழக அரசியலில் சினிமா மற்றும் உண்மையைக் குறித்த விவாதத்தை மீண்டும் ஒருமுறை தீவிரப்படுத்தியுள்ளது. விஜய் அளித்த அந்த வீடியோ, அரசியல் நம்பகத்தன்மை மற்றும் மக்கள் எதிர்பார்ப்புகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
சேட்டன் போட்டு பொளந்து இருக்கான் 😂😂
பக்கத்து ஸ்டேட்காரன் எல்லாம் காரி துப்புர அளவுக்கு இருக்கு விஜய் பண்ணது 😂 pic.twitter.com/KkkcSpW9pZ
— மெட்ராஸ் பையன் (@madraspaiyan_) October 3, 2025
இதையும் படிங்க: நடுரோட்டில் நின்று கண்கலங்கி புலம்பி தவித்த தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்! வைரல் வீடியோ காட்சி...