கொரனோ வைரஸ் உருவாக இதுதான் காரணம்? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!

கொரனோ வைரஸ் உருவாக இதுதான் காரணம்? இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!



Video goes viral about corono virus

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவ தொடங்கியுள்ள நிலையில் இதுவரை 400 கும் அதிகமானோர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனனர். 17 ஆயிரத்துக்கு அதிகமானோர் வைரஸ் தாக்குதலால் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பாம்பு சூப்பில் இருந்து இந்த வைரஸ் பரவியதாக கூறப்படும் நிலையில் வைரஸ் தாக்குதலால் மக்கள் சாலைகளில் மயங்கி விழுவது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகின்றன, அதேபோல கொரனோ வைரஸ் உருவாக காரணம் இதுதான் என்று சமூக வலைதளங்களில் வீடியோ ஓன்று வெளியாகி வைரலாகிவருகிறது.

வீட்டின் மேற்கூரையில் இருக்கும் ஓடுகளை பிரிக்கும் போது அதில் இருந்து வௌவால்கள் கூட்டம் கூட்டமாக பறந்து செல்கிறது. இதுதான் கொரனோ வைரஸ் உருவாக காரணம் என சிலர் இந்த வீடியோவை பரப்பி வரும் நிலையில் இந்த வீடியோ குறித்த உண்மை தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த வீடியோ கடந்த 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா பகுதியில் எடுக்கப்பட்டது என்றும், கட்டிட காண்டிராக்டர் ஒருவர் இந்த வீடியோவை பதிவேற்றியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

எனவே, சமூக வலைத்தளங்களில் பதியப்படும் பதிவுகளின் உண்மை தன்மை அறியாமல் அதை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.