சீனாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை; ரஷ்யாவிற்கு ஆயுதம் வழங்கினால் பின் விளைவுகளை ஏற்படுத்தும்..!!



US warns China; Arms to Russia will have repercussions..

சீனா ரஷியாவிற்கு ஆயுதங்களை வழங்கினால், அது இருதரப்பு உறவுகளை பாதிப்பதுடன், விளைவுகளை உண்டாக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், நேற்று இந்தியா வந்தார். அப்போது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாகவும், உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும் விவாதித்தார். 

இதற்கிடையே அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், ரஷியாவுக்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து சீனா பரிசீலித்து வருகிறது, அது இருதரப்பு உறவுகளை பாதிப்பதுடன், விளைவுகளை ஏற்படுத்தும் என்று சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.  

செய்தியாளர்கள் சந்திப்பில் இது குறித்து பேசிய அவர், ரஷியாவின் உக்ரைன் ஆக்கிரமிப்புக்கு சீனா ஆதரவளித்ததுடன், ரஷியாவுக்கு உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது. நான் சீனாவின் மூத்த வெளியுறவுக் கொள்கை அதிகாரி வாங் யியை சந்தித்தேன்.

அப்போது ரஷியாவிற்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து சீனா பரிசீலித்து வருவது தொடர்பான தகவல் குறித்து அவரிடம் எங்களின் கவலையை தெரிவித்தேன் என்றும், இதனால் இருதரப்பு உறவில் பல விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறியதாகவும், அவர் தெரிவித்தார்.