அமெரிக்காவில் இந்திய வம்சாவளி குடும்பத்தினர் மர்ம மரணம்; தாய்-தந்தை, மகள் சடலமாக மீட்பு.!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி குடும்பத்தினர் மர்ம மரணம்; தாய்-தந்தை, மகள் சடலமாக மீட்பு.!



US Massachusetts Indian Origin Family Died Mystery 

 

அமெரிக்காவில் உள்ள Massachusetts மாகாணத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி குடும்பத்தினர் ராகேஷ் கமல் (வயது 57). இவரின் மனைவி டீனா (வயது 54). தம்பதிகளுக்கு 18 வயதுடைய அரியனா என்ற மகள் இருக்கிறார். 

இவர்கள் அனைவரும் தங்களின் வீட்டில் உள்ள வெவ்வேறு அறைகளில் வசித்து வருகின்றனர். தம்பதிகள் இருவரும் அங்குள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் உயர் பொறுப்பில் பணியாற்றி வருகிறார்கள்.

world

சமீபகாலமாக தம்பதி பொருளாதார ரீதியான பிரச்சனைகளை எதிர்கொண்டதாக தெரியவருகிறது. இந்நிலையில், நேற்று மூவரும் தங்களின் வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். 

இவர்கள் எப்படி உயிரிழந்தார்கள்? என்ற விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்டமாக நிதிச்சுமையால் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக மூவரும் தற்கொலை செய்துகொண்டது உறுதியானது.