28 ஆண்டுகளை நினைவு செய்த இந்தியன் திரைப்படம்; பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மாபெரும் படைப்பு.!



Indian Part One Movie Complete 28 Years 

 

கடந்த 1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில், ஸ்ரீ சூர்யா மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான திரைப்படம் இந்தியன். ஜீவா ஒளிப்பதிவில், லெனின், விஜயன் எடிட்ங்கில் வெளியான இந்தியன் திரைப்படம், தமிழ் திரையுலகை ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தது. 

இந்தியன் மாபெரும் சாதனை திரைப்படம்:

அன்றைய மதிப்பில் ரூ.15 கோடி செலவில் வெளியான திரைப்படம், பல மொழிகளில் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. இப்படத்தில் நடிகர்கள் கமல் ஹாசன் தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படத்தின் மீதான தாக்கம் இன்று வரை ரசிகர்களால் மறக்க இயலாத ஒன்று ஆகும். 

படக்குழுவினர்: 

இந்தியா மட்டுமல்லாது உலகமும் திரும்பிப்பார்த்த இப்படத்தில் கமல் ஹாசன், மனிஷா, ஊர்மிளா, சுகன்யா, மனோரமா, கௌண்டமணி, செந்தில், கஸ்தூரி, நிழல்கள் ரவி, பொன்னம்பலம், மகாநதி சங்கர் உட்பட பலரும் நடித்திருந்தனர். அந்த நாட்களிலேயே ஆஸ்கர் விருதுக்கும் இப்படம் பரிந்துரைக்கப்பட்டு இறுதி வரை சென்றது. இந்திய அளவில் பல விருதுகளையும் குவித்தது. 

கடந்த மே மாதம் 09 ம் தேதி 1996 ல் கோடை விடுமுறையை முன்னிட்டு இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இன்றோடு படம் வெளியாகி 28 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதனை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் #28YearsOfPanIndiaBBIndian என்ற ஹாஷ்டேக்கையும் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.