இலவசமா பீர் வேண்டுமா? அப்ப நீங்க செய்ய வேண்டியது ஒண்ணே ஒண்ணு தான்.. அமெரிக்க அரசின் அதிரடி சலுகைகள்.!

இலவசமா பீர் வேண்டுமா? அப்ப நீங்க செய்ய வேண்டியது ஒண்ணே ஒண்ணு தான்.. அமெரிக்க அரசின் அதிரடி சலுகைகள்.!


us-free-beer-wishes-of-the-person-being-vaccinated

அமெரிக்காவில் வரவிருக்கும் சுதந்திர தினத்திற்கு முன்பாக 70% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி விட வேண்டும் என்ற நோக்கில் அந்நாட்டு அதிபர் பைடன் பல அதிரடி ஆச்சர்ய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

கொரோனா பரவலின் முதல் அலையில் அமெரிக்கா அதிக பாதிப்பை சந்தித்தது. மேலும் உலக அளவில் பலி எண்ணிக்கையிலும் முதன்மையில் இருந்து வந்தது.

Free beer

அதன்பின் அமெரிக்காவில் ஏற்பட்ட அரசியலமைப்பு மாற்றத்திற்கு பிறகு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக்கப்பட்டது. இதுவரை 21 வயதிற்கு மேற்ப்பட்டவர்களில் 63% சதவீதம் மக்கள் மட்டுமே முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் வரும் ஜூலை மாதம் 4 ஆம் தேதி அமெரிக்க சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்குள் 70% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி விட அந்நாட்டு அதிபர் திட்டமிட்டுள்ளார். அதற்காக பல அதிரடி ஆர்ச்சயம் ஊட்டும் சலுகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதாவது தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நபருக்கு அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல இலவச பீர், இலவச விளையாட்டு டிக்கெட், தடுப்பூசி போடும் நாளில் இலவச குழந்தைகள் பராமரிப்பு, ஊதியத்துடன் கூடிய விடுமுறை, இலவச சொகுசு கப்பல் பயணம் உள்ளிட்ட பல சலுகைகளை தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அரசு அறிவித்துள்ளது.