அப்பா - மகள் உறவையே கொச்சப்படுத்திடீங்களே.... அப்பாவையே திருமணம் செய்து உடலுறவு கொண்ட மகள்! பந்தயத்துக்காக எடுத்த விபரீத முடிவு! நீதிமன்றத்தின் அதிரடி தண்டனை!!!



us-father-daughter-illegal-marriage-sentence

அமெரிக்காவில் தந்தை மற்றும் மகள் சட்டவிரோதமாக திருமணம் செய்து கொண்ட வழக்கில் நீதிமன்றம் கடுமையான தீர்ப்பளித்துள்ளது. நெப்ராஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த இருவருக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் தகவல் வெளியானதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. தற்போது இருவருக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட சந்திப்பு

நெப்ராஸ்காவைச் சேர்ந்த ட்ராவிஸ் ஃபீல்ட்குரோவ், 2000ஆம் ஆண்டு பிறந்த தனது மகள் சமந்தாவை குழந்தைப் பருவத்திலேயே விட்டு பிரிந்தவர். அதன் பின்னர் அவருடன் எந்த தொடர்பும் வைத்திருக்கவில்லை. சுமார் 20 ஆண்டுகள் கழித்து, சமந்தா தனது 20வது வயதில் தான் தந்தையை முதன்முறையாக சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பந்தயம் காரணமாக தவறான முடிவு

அந்தச் சந்திப்பிற்குப் பிறகு, இருவரின் உறவு தவறான திசையில் நகர்ந்தது. குடும்பத்தில் இருந்த உள்நிலை பிரச்சினைகளும், குறிப்பாக மாற்றாந்தாய் சகோதரியுடன் இருந்த மனக்கசப்பும் இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. அதனால், ஆத்திரத்தில் சமந்தா ஒரு விபரீத பந்தயம் வைத்து, தந்தையையே திருமணம் செய்து கொள்வதாக சவால் விடுத்துள்ளார். இதற்கு தந்தையும் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: பல இளம் நடிகைகளுடன் உடலுறவு.... பிரபல நடிகரின் காம லீலைகளை அம்பலப்படுத்திய பெண்! குடும்பத்திற்குள் தெரிந்த ரகசியம்... அடுத்து எடுத்த அதிரடி முடிவு!!!

டிஎன்ஏ மூலம் உறுதி; நீதிமன்ற தண்டனை

இருவரின் திருமண தகவல் சமூக வலைதளங்களில் பரவியதும், போலீசார் விசாரணை தொடங்கினர். ஆரம்பத்தில் தாங்கள் தந்தை-மகள் அல்ல என மறுத்தாலும், மேற்கொண்ட DNA சோதனை மூலம் உண்மை உறுதியாகியது. வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றபோது, நீதிபதி கடுமையாகக் கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து, ட்ராவிஸுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், சமந்தாவிற்கு 9 மாதங்கள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும், தண்டனை முடிந்த பின் இருவரும் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளக்கூடாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

இதையும் படிங்க: 11 ஆண்டுகால காதல் வாழ்க்கை! தாய்க்கு தனி அறையில் சிசிடிவியில் தான் குழந்தையை பார்க்க அனுமதி! பாத்ரூமுக்கு போன இரட்டை பெண் குழந்தைகளை கொடூரமாக கொன்ற தந்தை! கதறி துடிக்கும் தாய்!!!