ரஷியா - உக்ரைன் போர்: மக்கள் உயிரிழப்பு., போரை நிறுத்துங்கள் - தலிபான் வேண்டுகோள்.!

ரஷியா - உக்ரைன் போர்: மக்கள் உயிரிழப்பு., போரை நிறுத்துங்கள் - தலிபான் வேண்டுகோள்.!


ukraine-russia-war-afghanistan-taliban-govt-says-both-g

ரஷியா உக்ரைன் போர் உச்சகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், உக்ரைன் நகரங்களை தொடர்ந்து ரஷிய படைகள் கைப்பற்றி வருகின்றன. மேலும், தலைநகரை சென்று கைப்பற்ற முழு வீச்சில் ரஷிய துருப்புகள் ஈடுபட்டு வருகிறது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பின்னர் உக்ரைனை தனதாக்க ரஷியா அதிரடி நடவடிக்கை எடுத்து படையெடுப்பை நிகழ்த்தியுள்ளது.

Ukraine

உக்ரைன் படைகள் சார்பாக பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வந்தாலும், ரஷியா முன்னதாகவே பல்முனை தாக்குதலை தொடங்கியுள்ளதால் போர்ப்பதற்றம் உச்சக்கட்டம் அடைந்துள்ளது. ரஷியா தாக்குதலை கைவிட வேண்டும் என உலக நாடுகள் தெரிவித்த கண்டனத்தையும் கண்டுகொள்ளாமல் செயல்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு நாடுகள் பொருளாதார தடையும் விதித்துள்ளது. 

Ukraine

இந்நிலையில், தலிபான்கள் தலைமையிலான ஆப்கானிய அரசு, "உக்ரைன் மற்றும் ரஷியா அரசுகள் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும், மக்கள் உயிரிழப்பது கவலையை அளிக்கிறது. இருவரும் சண்டையை நிறுத்த வேண்டும்" என்று தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான உதவிகள் இந்தியா உட்பட சில நாடுகளால் மட்டுமே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.