எதற்கு பயப்படுகிறீர்கள்.? நான் கடித்துவிட மாட்டேன்.. புதினுக்கு உக்ரைன் அதிபர் அழைப்பு.!

எதற்கு பயப்படுகிறீர்கள்.? நான் கடித்துவிட மாட்டேன்.. புதினுக்கு உக்ரைன் அதிபர் அழைப்பு.!


Ukraine President Calls For Direct Talks With Putin

உக்ரைன் மீது ரஷிய படைகள் போர்தொடுத்து 9-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது.  போர் தொடர்ந்து உக்கிரம் அடைந்துள்ளதால் இரண்டு நாட்டிலும் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வருகின்றன.

இந்நிலையில், ரஷிய அதிபர் புதின் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார். அவர் கூறுகையில், ரஷ்யாவை தாக்கும் திட்டம் எங்களுக்கு இல்லை. எங்களிடமிருந்து உங்களுக்கு என்ன வேண்டும்.? எங்கள் நிலத்தை விட்டு வெளியேறுங்கள். 

ரஷ்ய அதிபர் புதின் என்னுடன் நேரடியாக அமர்ந்து பேசினால் மட்டுமே இந்த போர் முடிவுக்கு வரும். நான் கடித்துவிட மாட்டேன். நீங்கள் எதற்காக பயப்படுகிறீர்கள்.? என கேள்வி எழுப்பியுள்ளார்.