Breaking: 180 பயணிகளுடன் சென்ற விமானம் ஈரானில் விழுந்து நொறுங்கியது. அதிர்ச்சி தகவல்.

Breaking: 180 பயணிகளுடன் சென்ற விமானம் ஈரானில் விழுந்து நொறுங்கியது. அதிர்ச்சி தகவல்.


ukrain-flight-accident-180-passengers-dead

சமீப காலமாக விமான விபத்துகள் அதிகரித்துவரும் நிலையில் இன்று மீண்டும் ஒரு கோரமான விமான விபத்து நடந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

உக்ரைன் நாட்டில் இருந்து 180 பயணிகளுடன் பறந்துகொண்டிருந்த பயணிகள் விமானம் ஓன்று ஈரான் தலைநகர் தெக்ரான் விமான நிலையம் அருகே வெடித்து சிதறியுள்ளது. முதல் கட்ட விசாரணையில் விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறே இந்த விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

flight accidentவிமானத்தில் பயணம் செய்த அனைவரும் இறந்திருக்க கூடும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே அமெரிக்கா, ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் வேளையில் இந்த திடீர் விமான விபத்து அனைவரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.