ரஷியாவின் மீது எந்த தடையும் விதிக்காத ஐக்கிய அரபு அமீரகம்... காரணம் என்ன தெரியுமா?..! 

ரஷியாவின் மீது எந்த தடையும் விதிக்காத ஐக்கிய அரபு அமீரகம்... காரணம் என்ன தெரியுமா?..! 



UAE No Sanctioning to Russia

ரஷியாவின் மீது அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் பல தடைகளை விதித்துள்ள நிலையில், ஐக்கிய அரபு அமீரகம் ரஷியாவின் மீதான நட்பால் தடை ஏதும் விதிக்காமல் பிரச்சனையை பேசி தீர்த்துக்கொள்ள சொல்லி விலகி இருக்கிறது.

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு காரணமாக, ரஷியாவின் மீது மேற்கத்திய நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், நேட்டோ நாடுகளுடன் உக்ரைனை இணைக்க கூடாது என்ற வாதத்துடன் போர் தொடுத்து சென்றதால், நேட்டோ படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஐரோப்பிய யூனியனில் உக்ரைனை அங்கமாக அறிவிக்க இங்கிலாந்து மற்றும் மேற்கு நாடுகள் தயக்கம் காண்பித்து வருகிறது. 

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் தடை விதித்து உத்தரவிட்ட நிலையில், போரினால் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை கூடுதலாக மேலும் உயர்ந்தது. ரஷியாவில் இருந்து தான் ஐரோப்பிய யூனியனுக்கு பெருமளவு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், மேற்கு நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனின் செயல்பாடுகள் ரஷியாவுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

UAE

பின்லாந்து, லாட்வியா, எஸ்டோனியா, பல்கெரியா, குரோஷியா, செக் குடியரசு மற்றும் ஸ்லோவாகியா ஆகிய நாடுகள் 2020 ஆம் வருடம் ரஷியாவில் இருந்து மூன்றில் இரண்டு பங்கு எரிவாயுவை பெற்றிருந்த நிலையில், ஜெர்மனி, ஆஸ்திரியா, கிரீஸ், இத்தாலி மற்றும் லிதுவேனியா, போலந்து, ஹங்கேரி நாடுகள் 40 % எரிவாயுவை ரஷியாவிடம் இருந்தே பெற்றது.

இதனால் ஐரோப்பிய யூனியன் ரஷியாவை எரிபொருளுக்கு நம்பியிருந்த நிலையில், உக்ரைன் விவகாரத்தில் அவர்கள் விதித்த தடை அவர்களுக்கே ஆப்பாக மாறி, ரஷியா தனது விநியோகத்தை குறைந்துகொண்டது. இதனால் மேற்கத்திய நாடுகள் எரிவாயு பிரச்னையை சந்திக்கவுள்ள நிலையில், அதன் விலை மேலும் உயரலாம் என்றும் தெரியவருகிறது. இந்த தட்டுப்பாட்டை தவிர்க்க அமெரிக்காவின் பார்வை அரபு நாடுகளின் பக்கம் திரும்ப, அவர்களிடம் பேசி ஐரோப்பிய நாடுகளுக்கு எரிபொருள் வழங்க ஏற்பாடு செய்யலாம் என திட்டமிட்டது. 

UAE

ஒட்டுமொத்த பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் நாடுகளின் அமைப்பு OPEC மூலமாக இதனை செயல்படுத்தலாம் என முடிவெடுத்திருந்த வேலையில், அரபு எமிரேட்ஸ், சவூதி, கத்தார் போன்ற நாடுகள் எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க இயலாது என்று தெரிவித்துவிட்டது. ஐக்கிய அரபு அமீரகம் மேற்கத்திய நாடுகளுடன் நல்லுறவை பேணி வந்தாலும், அது ரஷியாவின் நெருங்கிய நண்பர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அதனை உறுதி செய்யும் வகையிலேயே அமீரகமும் செயல்படுகிறது.
 
ஐ.நா சபையில் ரஷியாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முயற்சியின் போது, அவையை புறக்கணித்த நாடுகளில் இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் உலக நாடுகளால் கவனிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சவுதியின் இளவரசர் முகமது பின் சல்மானை எரிபொருள் விவகாரத்திற்காக தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அவர்கள் இலாவகமாக அழைப்பை எடுக்காமல் இருந்துவிட்டனர். மேலும், உக்ரைன் அதிபர் வோலோடிமிர், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும் என அழைப்பை பரிமாறிக்கொண்டனர்.

UAE

அரபு அமீரகத்தில் ஈரானிய ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத்தாக்குதலில், அமெரிக்கா தங்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை என அமீரகம் கோபத்தில் இருப்பதால், சத்தமே இல்லாமல் அமெரிக்காவுக்கு டேக்கா கொடுத்துள்ளனர். அமெரிக்காவை பொறுத்த வரையில் ஈரானின் அணுசக்தி ஒப்பந்த எதிர்ப்பு விவகாரத்தில் மட்டுமே முனைப்புடன் இருப்பதால், அமீரகத்தில் நடக்கும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களுக்கு உதவவில்லை. 

அமீரகத்தின் ஒப்பந்தங்கள் அனைத்தும் ஆசிய நாடுகளுடன் நீண்டகால விநியோக ஒப்பந்தத்துடன் நெருங்கி இருப்பதால், திடீரென ஐரோப்பிய நாடுகளுக்கு இயற்கை எரிவாயு, கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இயலாது என்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் தெரிவித்துவிட்டன.