உங்க அருமை தெரியாம தப்பு பண்ணிட்டேன்!.. ப்ளீஸ் எல்லோரும் திரும்பி வாங்க!: எலான் மஸ்க் அடித்த அந்தர் பல்டி..!

உங்க அருமை தெரியாம தப்பு பண்ணிட்டேன்!.. ப்ளீஸ் எல்லோரும் திரும்பி வாங்க!: எலான் மஸ்க் அடித்த அந்தர் பல்டி..!



twitter-has-rehired-some-of-its-laid-off-employees

ட்விட்டர் நிறுவனம் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் சிலரை மீண்டும் வேலைக்கு அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாஷிங்டன், சமூகவலைதளமான டுவிட்டரை, டெஸ்லா நிறுவன தலைவரும், உலகின் பெரும் பணக்காரருமான, எலான் மஸ்க் வாங்கினார். இதை தொடர்ந்து டுவிட்டர் நிர்வாகத்தின் உயர் பதவியில் இருந்த நிர்வாகிகளை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்தார். இதை தொடர்ந்து உலகம் முழுவதும் பணியாற்றும் டுவிட்டர் நிறுவனத்தின் பணியாளர்கள் பலரை நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

உலகம் முழுவதிலும் உள்ள ட்விட்டர் நிறுவனத்தில் சுமார் 7 ஆயிரத்து 500 பேர் வேலை செய்து வருகின்றனர். அதில், 50 சதவிகிதத்தினரை கடந்த 4-ஆம் தேதி அந் நிறுவனம் பணி நீக்கம் செய்தது. இது தொடர்பாக டுவிட்டர் நிறுவனம், ஊழியர்களுக்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பியது. ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து ஒரே நாளில், 50 சதவிகித பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் ஊழியர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனம் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் சிலரை மீண்டும் வேலைக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சிலரிடம் தவறுதலாக பணி நீக்கம் செய்துவிட்டோம் என்றும் அதனால் மீண்டும் வேலைக்கு வருமாரு, ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், சில வேலையாட்களின் அனுபவம் மற்றும் வேலை, மேலும் ட்விட்டர் நிறுவனத்தின் எதிர்காலம் பற்றி எலான் மஸ்க் வைத்துள்ள திட்டங்களை செயல்படுத்துவதற்கு தேவைப்படும் என்பதை உணராமல் ட்விட்டர் நிறுவனம் அவர்களை வேலை நீக்கம் செய்துவிட்டதாகவும், அவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்ட வேலையாட்களின் மதிப்பை உணர்ந்து அவர்களை மீண்டும் வேலையில் சேர்க்க ட்விட்டர் நிறுவனம் அழைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.