உலகம்

#வீடியோ: 130 கி.மீ வேகம்.. நூலிழையில் உயிர் தப்பிய அதிஷ்டசாலிகள்.. துருக்கியை உலுக்கிய புயல்.!

Summary:

#வீடியோ: 130 கி.மீ வேகம்.. நூலிழையில் உயிர் தப்பிய அதிஷ்டசாலிகள்.. துருக்கியை உலுக்கிய புயல்.!

பருவமழை காலங்களில் உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை இயற்கையின் லேசான ஆட்டத்திற்கு முன்னர் மனிதன் அல்லாடிக்கொண்டு தான் வருகிறான். இந்த இயற்கை சீற்றம் மற்றும் புயல் காலங்களின் போது, நொடிப்பொழுதில் சிலர் அதிஷ்டவசமாக உயிர்தப்பிக்கும் நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கிறது. 

அந்த வகையில், துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் கடந்த 29 ஆம் தேதி மணிக்கு 130 கி.மீ வேகத்தில் புயல் காற்று கரையை கடந்தது. இந்த நிகழ்வின் போது, அங்குள்ள பல கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தது. 

வீடுகள் அடியோடு பெயர்த்து எறியப்பட்டும், காற்றின் சீற்றத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் பறந்து சென்று நொறுங்கிய நிகழ்வுகளும், கப்பல்கள் பல தரைதட்டி, மோதி விபத்து நடந்த துயரமும் நடந்தது. 

இந்நிலையில், அங்குள்ள சி.சி.டி.வி காமிராவில் பதிவான விடியோக்கள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோவில், நபரொருவர் நடந்து செல்கையில், சாலையோரம் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தகடு அடியோடு சரிந்து விழுந்த நிலையில், நூலிழையில் அவர் உயிர் தப்பினார். இதனைபோல பல விடியோக்கள் வெளியாகியுள்ளது.


Man narrowly escapes being crushed by collapsing panel during high winds in Istanbul


Advertisement