பெண்களை பசுக்கள் போல சித்தரித்து உலகளவில் சர்ச்சையை கிளப்பிய விளம்பரம்! மன்னிப்பு கேட்ட பிரபல நிறுவனம்!

பெண்களை பசுக்கள் போல சித்தரித்து உலகளவில் சர்ச்சையை கிளப்பிய விளம்பரம்! மன்னிப்பு கேட்ட பிரபல நிறுவனம்!


then-korea-milk-ad-controversy

பிரபல தென்கொரிய பால் பொருட்களை உற்பத்தி செய்யும்
 நிறுவனம் ஒன்று வெளியிட்ட விளம்பரம் உலகளவில் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அந்த நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

தென்கொரியாவை சேர்ந்த பிரபல பால் சார்ந்த பொருட்களை உற்பத்தி நிறுவனம் Seoul Milk. இந்நிறுவனத்தின் விளம்பரம் ஒன்று சமீபத்தில் வெளியானது. இது வைரலான நிலையில் உலகளவில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஏனெனில் அந்த விளம்பரத்தில் இளைஞர் ஒருவர் இயற்கையை படம்பிடிக்க செல்கிறார். அப்பொழுது அங்கு சில இளம்பெண்களை பார்க்கிறார்.

அந்தப் பெண்கள் இயற்கையோடு இணைந்து, யோகா செய்து அமைதியாக பொழுதை கழிக்கின்றனர். பின்னர் அவர்களை நெருங்கும் போது பெண்கள் அனைவரும் பசுமாடுகளாக காட்சிளிக்கின்றனர். பின்னர் சுத்தமான நீர், இயற்கையான உணவு, 100 சதவீதம் தூய்மையான பால் என அந்த விளம்பரம் முடிகிறது.  மேலும் அந்த விளம்பர வீடியோவை நிறுவனம் யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது. அது வைரலான நிலையில், பெண்களை தவறாக சித்தரிப்பது போன்று இருப்பதாக அந்த வீடியோவிற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

அதனைத் தொடர்ந்து அந்த விளம்பர வீடியோ யூடியூப் தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சர்ச்சைகள் தொடர்ந்த நிலையில் குறிப்பிட்ட நிறுவனம், தாங்கள் செய்தது தவறுதான். இதற்காக ஒவ்வொரு நபரிடமும் தலைகுனிந்து மன்னிப்பு கேட்கிறோம். இனியும் இதுபோன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என மன்னிப்பு கேட்டுள்ளனர்.