வாய் வழியாக பெண்ணின் வயிற்றுக்குள் சென்ற பாம்பு!: வைரலாக பரவி வரும் அதிர்ச்சி வீடியோ!..

ரஷ்ய நாட்டில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கிய போது அவரை அறியாமல் பாம்பு ஒன்று வாய் வழியாக உள்ளே சென்றுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மயக்க மருந்து அளித்த மருத்துவர்கள், 4 அடி நீள பாம்பு ஒன்றை வாய் வழியாக வெளியே எடுத்துள்ளனர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வைரலாக பரவி வரும் அந்த வீடியோ ட்விட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், மருத்துவர் ஒருவர் எண்டோஸ்கோப் என்னும் மருத்துவ கருவியின் உதவியுடன் அந்தப் பெண்ணின் வயிற்றுக்குள் சென்று தங்கிய பாம்பை, அவரது வாய் வழியாக எடுக்கும் காட்சி காண்பவர்களின் உடலை சிலிர்க செய்கிறது.
Medics pull 4ft snake from woman’s mouth after it slithered down there while she slept. pic.twitter.com/oHaJShZT3R
— Fascinating Facts (@FascinateFlix) November 12, 2022
அந்த 4 அடி நீள பாம்பு எப்படி அந்த பெண்ணின் வயிற்றுக்குள் சென்றது என்பது குழப்பமாகவே உள்ளது. அந்த பெண் தூங்கும்போது அந்த பாம்பு அவரது வாய் வழியாக அவரது வயிற்றுக்குள் சென்றிருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். அந்த பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றதால் அவர் உயிர் பிழைத்ததாக கூறப்படுகிறது.