உக்ரைன் போரை எதிர்த்து... இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ரஷ்ய மாணவி; கைது செய்த ரஷ்ய காவல்துறை...!!

உக்ரைன் போரை எதிர்த்து... இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ரஷ்ய மாணவி; கைது செய்த ரஷ்ய காவல்துறை...!!


The Russian student posted on Instagram against the war in Ukraine; Arrested by the Russian police...

ரஷியாவுக்கு எதிராக உக்ரைன் போர்க் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்ட மாணவியை வீட்டு சிறையில் வைத்தனர். 

ரஷியா உக்ரைன் மீது நடத்தி வரும் போரை, ஆரம்பத்தில் இருந்தே ரஷியர்களில் ஒரு தரப்பினர் எதிர்த்து வருகின்றனர். ரஷ்ய அரசு அப்படி எதிர்ப்பு தெரிவிப்பவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. 

இந்நிலையில் ரஷியாவின் ஆர்க்காங்கெல்ஸ்க் நகரை பல்கலைக்கழக மாணவி ஒலேஸ்யா(20), உக்ரைன் போர் தொடர்பாக ரஷியாவுக்கு எதிராக இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதுமட்டுமின்றி போரில் ரஷியாவை விமர்சிக்கும் வகையில் அவரது நண்பர்கள் பதிவிட்ட பதிவுகளையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். 

இந்த விவகாரத்தில் காவல்துறையினர், ஒலேஸ்யாவை கைது செய்து அவரை வீட்டு சிறையில் வைத்தனர். மேலும் அவரது காலில் 'எலக்ட்ரானிக் டேக்' பொருத்தி அவரது ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து வருகின்றனர். வீட்டு சிறையில் உள்ள ஒலேஸ்யா செல்போனில் பேசவும், இனையதளத்தை பயன்படுத்தவும் தடை செய்துள்ளனர்.

ரஷிய ஆயுதப் படைகளை இழிவுபடுத்தியதாகவும், பயங்கரவாதத்தை நியாயப்படுத்தியதாகவும் ஓலேஸ்யா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு பத்து வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.