அமெரிக்காவை திக்கு முக்காட வைத்த சூறாவளி.. மின்சாரம் இன்றி பரிதவிக்கும் மக்கள்..!

அமெரிக்காவை திக்கு முக்காட வைத்த சூறாவளி.. மின்சாரம் இன்றி பரிதவிக்கும் மக்கள்..!


the-hurricane-that-covered-america-people-suffering-wit

அமெரிக்க மாகாணத்தை புரட்டிப்போட்ட சூறாவளியால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் பரிதவிப்பதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதித்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மகாணத்தை கடுமையான சூறாவளி தாக்கியது.

இந்த சூறாவளியானது மணிக்கு 64 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியது. இவ்வாறு சுழற்றி அடிக்கப்பட்டு வீசிய சூறாவளி காற்றில் வீடுகள், கட்டிடங்கள், மின் கம்பங்கள் போன்றவை சிக்கி சின்னா பின்னம் ஆகின. மேலும் மரங்கள் வேரோடு விழுந்து சாலைகளை முடக்கியதோடு மட்டுமல்லாமல் அதிபயங்கர காற்றால் சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள் தடுப்பு சுவர்களின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

மேலும் வீடுகளில் உள்ள மேற்குறைகள் பல மையில் தொலைவிற்கு தூக்கி வீசப்பட்டன. இந்த சூறாவளி காற்றில் மின்கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால்  ஆயிரக்கணக்கான வீடுகளில் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். இதில் நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.