உலகம்

என்ன ஒரு கொடூர மனசு...! பெண்களை நிர்வாணமாக்கி கடைவீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்ற கும்பல்.!

Summary:

என்ன ஒரு கொடூர மனசு...! பெண்களை நிர்வாணமாக்கி கடைவீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்ற கும்பல்.!

நான்கு பெண்களை நிர்வாணமாக்கி அவர்களை குச்சியால் அடித்து கும்பல் ஒன்று கடைவீதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானில் சமீப காலங்களாக கும்பலாக சேர்ந்து வன்முறைகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்தநிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத் நகரில் உள்ள கடை வீதியில் 4 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம் அழைத்துச் சென்ற வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் பதின்பருவத்தைச் சேர்ந்த பெண் உட்பட நான்கு பெண்களை நிர்வாணமாக்கி, குச்சிகளால் அடித்து தர தரவென ஊர்வலமாக இழுத்து செல்கின்றனர்.

அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் யாரும் அப்பெண்களுக்கு உதவாமல் இருந்தது காண்போரை கலங்கச் செய்துள்ளது. அந்த பெண்கள் சுமார் ஒரு மணி நேரம் இந்த கொடூரத்தை அனுபவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்பகுதி போலீசார் இதுதொடர்பாக சிலரை கைது செய்துள்ளனர். 

அன்றைய தினம் பாவா சாக் மார்க்கெட்டுக்கு பெண்கள் குப்பை பொருட்களை சேகரிக்க சென்றனர். மிகவும் தாகமாக இருந்ததால் அங்குள்ள கடையில் தண்ணீர் கேட்டுள்ளனர். ஆனால் தங்களை திருடர்கள் என நினைத்து கடைக்காரர் ஒருவர் தாக்கியதாகவும், மேலும் தங்களின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி, குச்சிகளால் அடித்து சாலைகளில் ஊர்வலமாக கூட்டிச் சென்றதாக பாதிக்கப்பட்ட பெண்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.


Advertisement