தலிபான்களின் கொடூர செயல்.. ஆப்கானிஸ்தானில் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்ட கொடூர தண்டனை... அதிர்ச்சியில் ஆப்கானிஸ்தர்கள்..!

தலிபான்களின் கொடூர செயல்.. ஆப்கானிஸ்தானில் திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு வழங்கப்பட்ட கொடூர தண்டனை... அதிர்ச்சியில் ஆப்கானிஸ்தர்கள்..!


The brutal act of the Taliban.. The brutal punishment given to those involved in theft in Afghanistan... Afghans in shock..!

ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலிப்பான்களிலின் கைகளில் சென்றதிலிருந்து அங்குள்ள மக்கள் தங்களது சுதந்திரத்தை இழந்து அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் தலிப்பான்களால் பொதுமக்கள் கொடூரமான தண்டனைகளுக்கும், இன்னல்களுக்கும் ஆளாக்கப்படுகின்றனர்.

அந்த வகையில் திருட்டில் ஈடுபட்டதாக கூறி 4 பேரின் கைகளை வெட்டி தலிபான்கள் தண்டனை வழங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காந்தாஹாரில் உள்ள அகமது சாஹி  கால்பந்து மைதானத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்களின் முன்னிலையில்‌ கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேருக்கு தண்டனை கொடுப்பதாக அவர்களது கைகளை தாலிபன்கள் இரக்கமின்றி வெட்டியுள்ளனர்.

taliban

இது மட்டுமல்லாமல் பல்வேறு குற்ற சம்பவங்கள் ஈடுபட்ட 9 குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் 39 கசையடிகளை தலிபான்கள் கொடுத்து தண்டனையை நிறைவேற்றியுள்ளனர். இந்நிலையில் முறையான விசாரணையின்றி‌ தலிபான்கள் மக்களுக்கு கொடூரமான தண்டனைகளை வழங்குவதாக இங்கிலாந்து முன்னாள் அமைச்சரின் ஆலோசகரான ஷபானா நசுமிக் கூறியுள்ளார்.